Wednesday, February 5, 2014

நிலக்கடலை இனிப்பு உருண்டை

நிலக்கடலை இனிப்பு உருண்டை

நிலக்கடலை இனிப்பு உருண்டை

நிலக்கடலை இனிப்பு உருண்டை

தேவையான பொருட்கள்:

  1. நிலக்கடலை – 1 குவளை
  2. மண்டை வெல்லம் – 1/2 குவளை
  3. ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி


செய்முறை:

  1. வாணலியில் நிலக்கடலையை 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்றாக வறுக்கவும். கடலை வெடிக்க ஆரம்பித்த பிறகு அடுப்பை அணைத்து நன்றாக ஆற விடவும். பிறகு மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். தோலை நீக்க வேண்டியதில்லை.
  2. மண்டை வெல்லத்தை உதிர்த்துக் கொள்ளவும். வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடியை நிலக்கடலை பொடியுடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சில வினாடிகள் அரைக்கவும். இப்படி செய்வதால் அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து விடும்.
  3. இந்தக் கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். கலவையிலிருந்து சிறிய அளவு மட்டும் கையில் எடுத்து உள்ளங்கையில் உருட்டி விரல்களால் நன்கு அழுத்தி உருண்டை பிடிக்கவும். உருண்டைகளை காற்று புகாத பாத்திரத்தில் வைத்து சாப்பிடவும்.

குறிப்பு:

  • இந்த செய்முறையை வலைதளத்தில் கற்றேன். இது செய்வதற்கு மிக எளிமையான மற்றும் சத்துமிகுந்த ஒரு தின்பண்டம். 
  • நிலக்கடலை எண்ணைத் தன்மை மிகுந்ததாக இருப்பதால், உருண்டை பிடிக்க கூடுதலாக நெய் அல்லது வேறு எந்த எண்ணையும் சேர்க்கத் தேவையில்லை.

No comments :

Post a Comment