Sunday, January 26, 2014

மாப்பிள்ளை சம்பா இடியாப்பம்

மாப்பிள்ளை சம்பா இடியாப்பம்
மாப்பிள்ளை சம்பா இடியாப்பம்
தேவையான பொருட்கள்: (இரண்டு நபருக்கு)


மாவு தயாரிக்கும் முறை:
  1. மாப்பிள்ளை சம்பா அரிசி 1கிலோ வாங்கி, கல் மற்றும் தூசு நீக்கி, நன்றாக வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். இல்லையெனில் வெறும் வாணலியில் 5 நிமிடம் வறுத்து, ஆற வைக்கவும். 
  2. பின்னர் மாவு மில்லில் கொடுத்து மிகவும் சன்னமாக அரைத்துக் கொள்ளவும். 
  3. இந்த மாவை ஆற வைத்து, சல்லடையில் சலித்து, காற்று புகாத ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்கவும். இவ்வாறு செய்வதனால், மாவு எளிதில் கெட்டு விடாமல் அதிக நாட்கள் நன்றாக இருக்கும். 
  4. இந்த மாவை இடியாப்பம், புட்டு அல்லது கொழுக்கட்டை செய்ய பயன்படுத்தலாம்.
செய்முறை:
  1. இடியாப்ப மாவை ஒரு ஆழமான பாத்திரத்தில் போட்டு, அதில் இந்துப்பை கலக்கவும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிவரும் வரை காய்ச்சி, அடுப்பை அணைத்து விடவும்.
  3. உடனடியாக அந்த நீரை, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, ஒரு கரண்டி வைத்து பிசைந்து கொள்ளவும். நீர் அதிக சூடாக இருப்பதால், இதை சற்று கவனமாக செய்யவும்.
  4. சூடு சற்று குறைந்ததும், சிறிதளவு மாவை எடுத்து, இடியாப்ப அச்சில் வைத்து, இட்லி ஊற்றும் தட்டில் வட்ட வட்டமாக (இட்லி வடிவத்தில்) பிழிந்து கொள்ளவும். 
  5. இட்லி பாத்திரத்தில் வைத்து 8 முதல் 10 நிமிடம் வரை வேகவிடவும். 
  6. இதனுடன் இனிப்பிற்கு, நாட்டு சர்க்கரை போட்டு, அதில் தேங்காய் துருவல், சில துளிகள் நல்லெண்ணை ஊற்றி, கலந்து சாப்பிடலாம்.
  7. காரம் தேவையெனில் எலுமிச்சை / தேங்காய் / காய்கறிகள் போட்டு சேவை செய்தும் உண்ணலாம்.
குறிப்பு:
  • இது வழக்கமாக இடியாப்பம் செய்வதைப் போன்ற எளிதான முறைதான். இருந்தாலும், மாப்பிள்ளை சம்பாவில் எப்படி இடியாப்பம் தயாரிப்பது என்ற கேள்வி, புதிதாக முயற்சி செய்பவர்களுக்குத் தோன்றலாம். அதன் காரணமாகவே, இந்த செய்முறை தரப்பட்டுள்ளது. 
  • மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு பதிலாக, வேறு எந்த பாரம்பரிய அரிசி ரகங்களையும் அல்லது சிறுதானிய வகைகளையும், இதேபோன்று மாவாக்கி உபயோகிக்கலாம்.
  • இனிப்பு இடியாப்பத்திற்கு, தேங்காய் பால் எடுத்து, அதில் பனங்கற்கண்டு / நாட்டு சர்க்கரை / சுத்திகரிக்கப்படாத சர்க்கரை (Brown Sugar) மற்றும் ஏலக்காய் தூள் கலந்து உபயோகிக்கலாம்.

கவுணி அரிசி இடியாப்பம்
கவுணி அரிசி இடியாப்பம்
சோள இடியாப்பம்
சோள இடியாப்பம் தேங்காய் பாலுடன்

No comments :

Post a Comment