Friday, January 31, 2014

குதிரைவாலி தக்காளி சாதம்


குதிரைவாலி தக்காளி சாதம்

குதிரைவாலி தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்:
  1. குதிரைவாலி அரிசி – 1 குவளை (150 gms)
  2. தண்ணீர் – 3 குவளை
  3. தக்காளி – 3 (நடுத்தர அளவு)
  4. சிறிய / பெரிய வெங்காயம் – 1/2 குவளை
  5. இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  6. கொத்தமல்லி தழை – 1/4 குவளை
  7. புதினா இலை - 6
  8. நல்லெண்ணை – 2 தேக்கரண்டி
  9. கடுகு – 1/4 தேக்கரண்டி
  10. சோம்பு – 1/2 தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
  12. பச்சை மிளகாய் – 1
  13. மிளகாய் தூள் – 1/4 சிட்டிகை
  14. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  15. இந்துப்பு – சுவைக்கேற்ப
  16. பட்டை – 1 துண்டு (1/4 இன்ச் நீளமுள்ளது)
  17. கிராம்பு – 3
  18. பிரியாணி இலை – 2
  19. கல்பாசி - 1 தேக்கரண்டி

செய்முறை:
  1. சமைப்பதற்கு முன்னர் குதிரைவாலியை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் எண்ணை ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு சோம்பு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கல்பாசி போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது மற்றும் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமான பின்னர், கொத்தமல்லி தழை, புதினா இலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சிறிது இந்துப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 
  3. பின்னர் குக்கரில் நீரை ஊற்றவும். அது கொதிநிலைக்கு வந்த பிறகு குதிரைவாலி அரிசியைக் களைந்து போடவும். தேவையான இந்துப்பு சேர்த்து அரிசியை நன்றாக கலக்கவும். குக்கரை மூடவும். முதல் விசில் வந்த பிறகு, தீயைக் குறைத்து 8 நிமிடங்கள் காத்திருந்து, அடுப்பை அணைக்கவும். 
  4. குக்கரில் ஆவி போன பின்பு, சாதத்தை ஒரு முறை கிளறி விட்டு, சூடாக பரிமாறவும்.

குறிப்பு:
  • இந்த செய்முறையை, என் தாயாரிடம் கற்றுக் கொண்டேன். வழக்கமாக உபயோகிக்கும் வெள்ளை அரிசிக்கு பதில் சிறுதானியத்தை பயன்படுத்தியுள்ளேன். வரகு மற்றும் சாமை அரிசிகளையும் கூட உபயோகிக்கலாம்.
  • வெங்காயம் மற்றும் பூண்டு பயன்படுத்தாதவர்கள், அதை மட்டும் தவிர்த்து விடவும்.

No comments :

Post a Comment