Tuesday, December 10, 2013

திணை வெண்பொங்கல்

திணை வெண்பொங்கல்

தேவையானப் பொருட்கள்: (2 நபருக்கு)
  1. திணை அரிசி - 1 குவளை (150 கிராம்)
  2. நீர் – 3 1/2 குவளை
  3. முளை விட்ட பாசிப்பயறு – 1/3 குவளை
  4. சீரகம் – 1/2 தேக்கரண்டி
  5. மிளகு – 1/4 தேக்கரண்டி
  6. பெரிய வெங்காயம் – 1 நீளமாக நறுக்கியது (விருப்பப்பட்டால் மட்டும் சேர்க்கவும்)
  7. முழு பச்சை மிளகாய் – 1
  8. இந்துப்பு – 1/2 தேக்கரண்டி
  9. பொடிதாக நறுக்கிய இஞ்சி – 1/4 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் - சிறிதளவு
  11. கறிவேப்பிலை – விருப்பமான அளவு



செய்முறை:
திணை அரிசியை சமைப்பதற்கு முன்னர் 20 முதல் 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின் நீரில் ஒரு முறை கழுவி, அரிசியைக் களைந்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் அரிசியைப் போட்டு, அதனுடன் மேலேக் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, 3 1/2 குவளை நீர் ஊற்றி மூடிவைக்கவும். ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 8 நிமிடம் வரை வைத்திருக்கவும். ஆவி போனபிறகு 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து சாதத்தை கிளறி விடவும். சூடு சற்று குறைந்ததும் சாப்பிடலாம்.

குறிப்பு:
  1. குக்கருக்கு பதில் வழக்கமாக சாதம் சமைக்கும் பாத்திரம் அல்லது மண் பாத்திரம் பயன்படுத்தலாம். எந்த பாத்திரத்தில் சமைத்தாலும், சாதம் முழுமையாக வெந்த பிறகு பாத்திரத்தை மூடி விட்டு, 10 நிமிடம் கழித்து திறப்பது நல்லது.
  2. பொங்கல் நன்கு குழைவாக இருக்க விரும்பினால், தண்ணீர் சற்று கூடுதலாக சேர்த்துக் கொள்ளவும்.
  3. வெண் பொங்கல் செய்ய வரகு மற்றும் சாமை அரிசிகளையும் பயன்படுத்தலாம்.
  4. இது சாத்வீக முறைப்படி சமைக்கப்பட்டிருப்பதால், எண்ணை / நெய் /வனஸ்பதி சேர்க்கப்படவில்லை. முந்திரிப்பருப்பு சேர்க்க விரும்பினால், வெறும் வாணலியில் வறுத்து பொங்கலுடன் கலந்து கொள்ளவும்.
இதே செய்முறையில் சீரக சம்பா வெண்பொங்கல்:

சீரக சம்பா வெண்பொங்கல்

No comments :

Post a Comment