Friday, October 25, 2013

பஞ்சாட்சரம்

பஞ்சாட்சரம்
பஞ்சாட்சரம்

இது 5 வகையான பொருட்களாலான சாறு ஆகும். கீழேத் தரப்பட்டுள்ள அளவுகளின் படியே செய்தால், ஆப்பிள் பழச்சாறு போன்ற சுவை கிடைக்கும். இல்லையெனில் சுவை மாறி விடும்.



தேவையான பொருட்கள் (1 நபருக்கு):

  1. வெண்பூசணி சாறு – 1 டம்ளர் (100 மில்லி)
  2. வாழைத்தண்டு சாறு – 1/2 டம்ளருக்கும் சற்று குறைவாக
  3. முள்ளங்கி சாறு – 1/4 டம்ளருக்கும் சற்று குறைவாக
  4. எலுமிச்சை – 1/2 நறுக்கியது
  5. தேன் – 3 தேக்கரண்டி

செய்முறை:
வெண்பூசணி, வாழைத்தண்டு மற்றும் முள்ளங்கி மூன்றிலிருந்தும் தனித்தனியாக மேற்குறிப்பிட்ட அளவு சாறு எடுத்து கலந்து கொள்ளவும். அதில் பாதி எலுமிச்சை பழத்தைப் பிழிந்து பின் 3 தேக்கரண்டி தேன் கலந்து பருகவும்.

No comments :

Post a Comment