Friday, October 25, 2013

கீர்

வல்லாரை கீர்

பீட்ரூட் கீர்
பீட்ரூட் கீர்

கேரட் கீர்
கேரட் கீர்
கறிவேப்பிலை கீர்
கறிவேப்பிலை கீர்
கீர் வகைகள்:
கறிவேப்பிலை, மணத்தக்காளி, புதினா, வல்லாரை, தூதுவளை, கரிசலாங்கண்ணி (மஞ்சள் / பச்சை) அல்லது கேரட் இவற்றில் ஏதாவது ஒன்றை கீர் தயாரிக்க பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:
மேற்குறிப்பிட்ட வகைகளில் ஏதாவது ஒன்று - 1 பங்கு
தேங்காய் துருவல் - 1 பங்கு
நாட்டு சர்க்கரை - சுவைக்கேற்ப

செய்முறை:
கீர் செய்ய வேண்டிய கீரை அல்லது கேரட் 1 பங்குடன், தேங்காய்த் துருவல் 1 பங்கு சேர்த்து, இரண்டையும் மிக்ஸியில் போட்டு சாறு எடுக்கவும். இதனுடன் சுவைக்கேற்ப நாட்டு சர்க்கரை கலந்து குடிக்கவும்.

குறிப்பு:
1.கேரட் கீரில் விருப்பப்பட்டால் தேங்காய்த் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்கலாம். இல்லையெனில் வெறும் கேரட் சாறு  மட்டும் எடுத்து பருகலாம். அதுவே சுவையாக இருக்கும்.

2.
பேரிச்சம் பழம் கீர்
பேரிச்சம் பழம் கீர்
பேரிச்சம் பழம் கீர் செய்யும் போது பழத்தை குறைந்தது 5 மணி நேரம் ஊற வைத்து பிழிந்து சாறாக்கி குடிக்கலாம். முடி கொட்டும் பிரச்சினை உள்ளவர்கள் இந்த பழச்சாறில் சில துளிகள் எலுமிச்சை பழம் பிழிந்து தேன் சேர்த்து குடித்தால் சரியாகி விடும்.

3.வல்லாரை கீர் வாரம் 1 அல்லது 2 முறை மட்டும் வெறும் வயிற்றில் (காலை) குடித்தால் போதும்.

No comments :

Post a Comment