Saturday, October 26, 2013

காய்கறி பொரியல்

உங்கள் விருப்பத்திற்கேற்ப, ஏதாவது ஒரு காய்கறியில் பொரியல் செய்யலாம்.

தேவையான பொருட்கள்: (இரண்டு நபருக்கு)
  • பொடியாக நறுக்கிய காய்கறி – 150 முதல் 200 கிராம் வரை
  • சாம்பார் பொடி – 1/4 தேக்கரண்டி
  • இந்துப்பு – சுவைக்கேற்ப
  • நீர் – சிறிதளவு
  • தேங்காய் துருவல் – 1 அல்லது 2 தேக்கரண்டி

செய்முறை:
  1. காயைக் கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. சமைக்கும் பாத்திரத்தில் காயைப் போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து வேக வைக்கவும். பாத்திரத்தை மூடி வைக்கவும்.
  3. மூன்று நிமிடங்களுக்கு பிறகு, சாம்பார் பொடி போட்டு கிளறி விட்டு, மீண்டும் சிறிது நேரம் வேக வைக்கவும்.
  4. காய் பாதி வெந்த பிறகு, அடுப்பை அணைக்கவும். பின் இந்துப்பை சேர்க்கவும்.
  5. சூடு சற்று குறைந்ததும் தேங்காய் துருவல் போட்டு கிளறவும்.

பாகற்காயையும், வெண்டைக்காயையும் கூட எண்ணை இல்லாமல் சமைக்கலாம்.

பாகற்காய் சமைக்கும் முறை;
  1. முதலில் காயைக் கழுவி, பொடியாக நறுக்கவும்.
  2. அதில் சிறிது நீர் ஊற்றி, முக்கால் பதம் வரை வேக வைக்கவும்.
  3. பின்னர் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.
  4. தக்காளி நன்கு வதங்கியதும், 1\4 தேக்கரண்டி மிளகாய் தூள் போடவும்.
  5. இரண்டு நிமிடங்கள் வதக்கிய பிறகு, அடுப்பை அணைக்கவும்.
  6. இதற்கிடையில் கால் குவளை தேங்காய் துருவலையும், 1\2 தேக்கரண்டி சீரகத்தையும், மிக்ஸியில் போட்டு, அரைத்து, தயாராக வைத்துக் கொள்ளவும்.
  7. பாகற்காய் சூடு சற்று தணிந்ததும், அரைத்த விழுது மற்றும் இந்துப்பு போட்டு நன்றாக கிளறவும்.
வெண்டைக்காய் சமைக்கும் முறை;
  1. ஒரு வாணலியில் நறுக்கிய வெண்டைக்காய் மற்றும் பெரிய வெங்காயத்தை போட்டு, சில நிமிடங்கள் வதக்கவும்.
  2. அதில் நறுக்கிய தக்காளியை போட்டு, வெண்டைக்காய் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
  3. பின்னர் அதில் மிளகாய் பொடி போட்டு சில நிமிடங்கள் வதக்கிய பிறகு, அடுப்பை அணைத்து விடவும்.
  4. இறுதியில் இந்துப்பு சேர்த்து கிளறி விடவும். 

No comments :

Post a Comment